அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஜனவரியில் அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்று, அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், சமீபத்தில், “அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில், கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஆணையில் கையெழுத்திடுவேன்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இப்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என அவர் எச்சரிக்கையுடன் கூறியுள்ளார். தனது சமூகவலைதள பதிவு ஒன்றில், “அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிய அளவில் வாங்குவதன் மூலம் மிகப்பெரிய பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும். இதற்காக நான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறினேன். இல்லாவிட்டால், எல்லா வழிகளிலும் வரிகள் தான்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் உலகளவில் பொருளாதார நிலவரத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.