புதுடெல்லி: பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், துபாய் பட்டத்து இளவரசர் முகமது பின் ரஷீத் நேற்று முதல் முறையாக இந்தியா வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார். பிரதமர் மோடி நேற்று இளவரசர் முகமது பின் ரஷீத்துக்கு மதிய விருந்து அளித்தார்.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். விளம்பரம் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று மும்பை செல்லும் இளவரசர் முகமது பின் ரஷீத், மும்பை தொழிலதிபர்களை சந்தித்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி, நிதி தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
துபாய் பட்டத்து இளவரசரின் வருகை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “துபாய் பட்டத்து இளவரசர் முகமது பின் ரஷீத்தின் முதல் இந்தியா வருகை இது. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவில் அவரது பயணம் மிகவும் முக்கியமானது” என்றார்.