அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் கடுமையான வானிலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியூயார்க், வாஷிங்டன், பால்டிமோர், நியூஜெர்சி, விர்ஜினியா உள்ளிட்ட வடகிழக்கு நகரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாலை முதல் இரவு வரை கனமழை தொடர்ச்சியாக பெய்தது. இந்த மழையால் பெரும் அளவில் நகரப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகள், பெட்ரோல் நிலையங்கள், சுரங்க ரயில்கள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மழை நிவாரணம் தேவையான அளவில் பெருக்கெடுத்ததால், பல குடியிருப்புகளில் தரைதளத்தில் வசித்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்க அவசர சேவைகள் விரைந்து செயல்பட்டன. நியூயார்க் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. நியூயார்க் மற்றும் நியூஜெர்சி இடையேயான பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், சில மாற்றுப்பாதைகளில் மட்டுமே அவை இயங்கின.
இந்த வானிலை பாதிப்பால், நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து தகர்ந்தது. ஒரே நாளில் 1,966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதோடு 10,000 விமானங்கள் பல மணி நேரம் தாமதம் காணப்பட்டன. முக்கிய விமான நிலையங்கள் மற்றும் சுரங்க நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால், பயணிகள் நெரிசலும் ஏற்பட்டது. நியூஜெர்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது, மெதுவாக நகரும் புயல் மேகங்கள் தான் இந்த அளவு மழையை உருவாக்கியதாம். இது அந்நகரங்களில் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. மின்சாரம் தடை, போக்குவரத்து நெரிசல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.