நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 80வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பது, காசா மோதலை நிறுத்துவது குறித்து உலக நாடுகள் விவாதிக்கின்றன. இதில் பல தலைவர்கள் பாலஸ்தீனை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் பேச்சின் போது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல தலைவர்களின் மைக் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் நடவடிக்கையை இனப்படுகொலை எனக் குறித்தபோது அவரது மைக் துண்டிக்கப்பட்டது. கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் இந்தோனேஷிய அதிபர் பேச்சுகளும் இடையில் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பலரிடையே சந்தேகம் மற்றும் யூகங்களை உருவாக்கியுள்ளது. சிலர் இதை அரசியல் சிக்கலுடன் தொடர்புபடுத்தினாலும், ஐ.நா. அதிகாரிகள், மின்னணு சாதனங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என அறிவித்தனர்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டங்கள் மிகவும் முக்கியமானது, எனவே பேச்சுகளை குறைந்த தாமதத்துடன் அனைவருக்கும் கேட்கச் செய்யும் தொழில்நுட்ப பாதுகாப்பு முன்னெடுக்கப்பட வேண்டும்.