அமெரிக்கா: எலான் மஸ்க் அமெரிக்காவை விட்டு வெளியேற அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது ஆதரவை டிரம்பிற்கு தெரிவித்தார். இதற்கு பதிலாக தான் வெற்றி பெற்றவுடன் எலான் மஸ்கிற்கு அதிபர் ட்ரம்ப் புதிய பதவி கொடுத்துள்ளார்.
இருப்பினும் அமெரிக்க அரசியலில் எலான்மஸ்கின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எந்த வகையில் உள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க் ஏன் அவரது சொந்த தாய் நாடான தென்னாப்பிரிக்காவிற்கு செல்லக் கூடாது என USA ஜனநாயகக்கட்சி நிர்வாகி நிடியா வெலாஸ்குவெஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் மஸ்க் கை நீண்டு வரும் நிலையில், ஜனநாயக் கட்சியினர் அவரது தேசிய வாதம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, அவர் 3 நாடுகளில் குடியுரிமை வைத்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் மார்சி விமர்சித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எலான் மஸ்கிற்கு எதிராக அரசியல அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் அதிபர் ட்ரம்ப் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.