நியூயார்க்: ரோபோ-வால் இப்படி சாவகாசமாக சுட்டு பதக்கம் வெல்ல முடியுமா? என்று துருக்கி வீரரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில், தூசி புகாத கண்ணாடி, துப்பாக்கி சூடு சத்தத்தை மட்டுப்படுத்தும் ear muffs போன்ற எவ்வித பிரத்யேக உபகரணங்களையும் பயன்படுத்தாமல், டீ-ஷர்ட், டிராக் பேண்ட் அணிந்தபடி துருக்கி வீரர் யூசுப் டைகிச் சாவகாசமாக சுட்டு பதக்கம் வென்றார்.
ஸ்டைலாக சுட்டு வெள்ளி வென்றதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான துருக்கி வீரர் யூசுப் டைகிச், ரோபோக்களால் தன்னைப்போல் பாக்கெட்டில் கை வைத்தபடி சாவகாசமாக சுட்டு பதக்கம் வெல்ல முடியுமா என எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பினார்.
எக்ஸ் தளத்தில் அதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், ஒலிம்பிக்கில் ரோபோக்கள் பங்கேற்றால் ஒவ்வொரு முறையும் குறி தவறாமல் சுட்டு பதக்கம் வெல்லும் என தெரிவித்துள்ளார்.