அமெரிக்கா: அவருக்கு வாழ்த்து சொல்ல போன் செய்தா இவரும் இணைந்தார் என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் நொந்து கொள்ளும் அளவிற்கு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவிப்பதற்காக டொனால்டு டிரம்பிற்கு போன் செய்துள்ளார். டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த போது, அந்த போன் காலில் எலான் மஸ்க் இணைந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக எலான் மஸ்க் கடுமையான பணியாற்றினார். இதனால் தன்னுடைய முதல் தோழன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக உலகத் தலைவர்கள் பலர் டொனால்டு டிரம்பிற்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தபோது, போன் காலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாக தகவல் வெளியானது. எலான் மஸ்க்கிற்று டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.
தேர்தலின்போது கமலா ஹாரிஸ் என கூகுளில் தேடினாலும் கமலா ஹாரிஸ் செய்திகள் வருகிறது. டொனால்டு டிரம்ப் என தேடினாலும் கமலா ஹாரிஸ் செய்திதான் வருகிறது என எலான் மஸ்க் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.