அமெரிக்கா: அரசியலமைப்புக்கு எதிரான நாலாவது கிளையாக அரசு நிர்வாக அமைப்புகள் செயல்படுகின்றன என்று அரசு அதிகாரிகளை எலான் மஸ்க் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தொடர்பை சரி செய்ய ‘டாஜ்’ என்ற துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பேசிய எலான் மஸ்க், “அரசியலமைப்புக்கு எதிரான 4வது அரசாங்க கிளையாக அரசு நிர்வாக அமைப்புகள் செயல்படுகிறது. ஜனநாயகத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேவை. அரசு அதிகாரிகள் மக்கள் விருப்பங்களை மீறி செயல்படக்கூடாது” என கூறினார்.
இவரது இந்த விமர்சனம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது