வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கிய ‘டாட்ஜ்’ பிரிவில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதன்பிறகு, ஏராளமான சட்டத் திருத்தங்களைச் செய்த டிரம்ப், அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்க, ‘டாட்ஜ்’ என்ற அரசுத் திறன் துறையை உருவாக்கினார்.
அவர் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கை இந்த துறையின் தலைமை நிர்வாகியாக நியமித்தார். நிர்வாகத்தில் மஸ்கின் பல தீவிரமான முடிவுகளால் அரசாங்கத்தின் தினசரி செலவு ரூ. 34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்புடன் இணைந்து எலான் மஸ்க் மேற்கொண்ட நடவடிக்கையால் டெஸ்லா உள்ளிட்ட அவரது நிறுவனத்தின் மதிப்பு சரிந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் டெஸ்லாவின் லாபம் 20 சதவீதம் சரிந்தது.

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகப் போவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில், அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கும் நேரத்தைக் குறைப்பதாக எலோன் மஸ்க் இன்று அறிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாலும், கார் விற்பனை சரிந்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.