கோபன்ஹேகன்: ரஷ்யா போர் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லையை தொடர்ந்து அத்துமீறி பறக்கும் நிகழ்வுகள் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. குறிப்பாக போலந்து மற்றும் எஸ்தோனியா வான் எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றன.

டிரோன் அச்சுறுத்தலை எதிர்க்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் ‘டிரோன் சுவர்’ எனப்படும் தொடர் சென்சார் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த அமைப்புகள் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்டறிந்து வீழ்த்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும். சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகள் மற்றும் டிரோன் எதிர்ப்பு அமைப்புகளையும் அனுப்பி வைத்துள்ளன.
டென்மார்க்கில் ஐரோப்பிய உச்சி மாநாடு நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேட்டோ கூட்டமைப்பு, அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், ரஷ்யாவின் பதட்ட விதிக்கும் முயற்சிகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையம் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன், “ரஷ்யா நம்மை சோதிக்க முயற்சிக்கிறது. ஆனால் ரஷ்யா நம்மிடம் பதட்டம் விதிக்க முடியாது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார். இந்நிலையில், டிரோன் சுவர் அமைப்பு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.