லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜூன் 30, 2023 அன்று, கத்தார் ஏர்வேஸ் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கொழும்புக்கு புறப்பட்டது. அதில் 85 வயதான அசோகா ஜெயவீரா இருந்தார். அவர் தெற்கு கலிபோர்னியாவில் ஓய்வு பெற்ற இருதயநோய் நிபுணர்.
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கொழும்புக்கு பயணிக்க 15 மணி நேரம் ஆகும். பயணத்தின் போது சைவ உணவு வேண்டும் என்று அவர் தனது டிக்கெட்டை முன்பதிவு செய்தபோது குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், சைவ உணவு இல்லை. அசைவ உணவு மட்டுமே இருந்தது.

விமானப் பணிப்பெண் அதை சாப்பிடச் சொன்னார். அதை வாங்கி சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்த அசோகா ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தனர்.
இருப்பினும், அசோகா இறந்தார். இந்த சூழ்நிலையில், அசோகாவின் மகன் சூர்யா ஜெயவீரா, கத்தார் ஏர்வேஸ் மீது $1,28,821 இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.