எலான் மஸ்க் தனது குழந்தைப்பருவம் மகிழ்ச்சியற்றதாக இருந்ததாக கூறினார். ஆனால், இதை அவரின் தந்தை எரால் மஸ்க் மறுத்துள்ளார். எலான் மிகச் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

எலான் தனது பள்ளிக்காலத்தில் சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார். ஆனால், அவரது தந்தை, அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்கு சென்றதாகவும், பிரபலமுள்ள பள்ளியில் படித்ததாகவும் கூறியுள்ளார்.
எரால் மஸ்க், தன்னுடைய குடும்பம் செல்வம் மிக்கதாக இருந்ததை வலியுறுத்தினார். எலானுக்கு சிறந்த கல்வி, வசதிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எலான் மஸ்க் தொழில் வெற்றியில் தந்தை முக்கிய பங்காற்றியதாகவும், அவரது வளர்ச்சிக்கு குடும்ப சூழலும் ஆதரவாக இருந்ததாகவும் கூறினார்.