இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், காஷ்மீர் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் இந்திய உறவு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா காஷ்மீர் பிரச்சனை மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் எந்த மத்தியஸ்தத்தையும் கோரவில்லை, நடுநிலை சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டால் ஒத்துழைப்போம் எனவும் அவர் கூறினார். இந்தியாவுடனான போரை விரும்பவில்லை என்பதையும் அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என இஷாக் தர் தெரிவித்தார்.