வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், “காசா அமைதி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. இதை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன” என்று தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மத்திய கிழக்கில் நிலையான அமைதி நிலவும் என நம்பிக்கை தெரிவித்தார்.

டிரம்ப் மேலும், “பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். இது முழு அரபு உலகத்துக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் முக்கிய திருப்புமுனையாக இருக்கும்” எனக் கூறினார்.
அதேபோல், சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட தகவலில், “ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அனைவரும் விரைவாகச் செயல்பட வேண்டும். நூற்றாண்டு பழமையான இந்த மோதலுக்கு முடிவுகொடுக்கவேண்டும். யாரும் விரும்பாத இரத்தப் பொழிவை நிறுத்த வேண்டிய நேரம் இது” என எழுதியுள்ளார்.
சர்வதேச அரசியல் வட்டாரங்கள் டிரம்பின் கருத்தை கவனத்துடன் நோக்குகின்றன. பல நாட்டு தலைவர்கள் காசா அமைதி முயற்சியை வரவேற்று, இது மத்திய கிழக்கு அமைதிக்கான ஒரு புதிய வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.