காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான உணவுப்பஞ்சம் மனிதாபிமான முறையை சோதிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் காரணமாக காசா எல்லைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக அப்பகுதிக்கு உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை உதவிகள் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. பலருக்கு ஒரே நேரத்துக்கு உணவும் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த சூழ்நிலையை சீர்செய்ய, சில நாடுகள் விமானங்களின் மூலம் உணவுப்பொருட்களை பாராசூட் வழியாக வீசி வருகின்றன. இந்தப் பொருட்களை பெற, மக்கள் கூட்டமாக ஓடி உணவுக்காக உயிர் போராட்டம் நடத்துகின்றனர். சிலர் பல நாட்களாகத் தங்களுக்குரிய ஒரு உணவு மூட்டைக்காக காத்திருக்கின்றனர்.
இதில், தன் குழந்தை இரு நாளாக பசியால் வாடுவதாகவும், தானாக சேகரித்த உணவுக்கட்டையை மற்றொருவர் தள்ளி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கதறும் ஒரு பெண்ணின் காட்சி கண்கள் கலங்க வைக்கும். இது போன்ற காட்சிகள் மனித மனங்களை உருக்க வைக்கும் அதிர்ச்சி தரும் படங்கள் ஆகும். பசிக்காக மரணம் நேரும் நிலையை 21-ஆம் நூற்றாண்டில் பார்க்க வேண்டியதா என்ற கேள்வி எழுகிறது.
உலகம் முழுவதும் இருந்து உதவிகள் விரைந்தாலும், அந்தப் பராமரிப்பு எப்போதும் போன்று மெதுவாகத்தான் செல்லுகிறது. உணவிற்காக மனிதர்கள் தங்களையே மறந்துவிட்டு ஒவ்வொரு கட்டையையும் பிடிக்கப் போராடும் காசாவின் உண்மை நிலை, உலகளாவிய அமைப்புகளின் கவனத்தை சீராக ஈர்க்க வேண்டியது அவசியம்.