ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த மேலும் 3 பணயக்கைதிகளை விடுவித்தது. இதேபோல், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 369 பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் இஸ்ரேலிய வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்தது. அன்றிலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் பிறகு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அர்ஜென்டினாவை சேர்ந்த யாரிர் ஹார்ன், ஜக்கி டெக்கல், இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த சாஷா ட்ரோபோனோவ் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் மூலம் ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலரை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி மேலும் 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதக் குழு இன்று விடுவித்துள்ளது. அதன்படி, யாஹர் ஹரன் (வயது 46), அலெக்சாண்டர் ரூபெனோ (வயது 29), சஹோய் டிகல் ஷென் (வயது 36) ஆகிய 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதக் குழு விடுவித்துள்ளது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள 369 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதில் 36 பேர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் கைதிகள்.