டெல் அவிவ்: ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு, ஏராளமான டிரோன்கள் மூலம் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பெரும்பாலான டிரோன்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு டிரோன் எலியாட் சர்வதேச விமான நிலையத்தை நேரடியாகத் தாக்கியது. இதனால் விமான நிலையத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. அவசரகால பாதுகாப்பு நடவடிக்கையாக, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் காசாவில் இரண்டாண்டுகளாகத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு எதிராக, ஹவுதி அமைப்பு அடிக்கடி டிரோன், ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு இஸ்ரேலும் அடிக்கடி பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த சமீபத்திய தாக்குதலை ஹவுதி அமைப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், இஸ்ரேல்–ஏமன் மோதல் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.