செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கத்திற்காக எலோன் மஸ்க் தனது உயிரணுவை தானம் செய்ததாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக தனது சொந்த உயிரணுவை நன்கொடையாக அளித்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை ஆராய எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சித்து வரும் வேளையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எலோன் மஸ்க் உயிரணுவை தானமாக வழங்கியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த செய்தியை எலோன் மஸ்க் மறுத்துள்ளார். அந்த செய்தியில் உண்மை இல்லை என்றும், தான் யாருக்கும் உயிரணுவை தானம் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அதே சமயம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆராய்ச்சியில் எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனம் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.