காஸா: இஸ்ரேலுக்கு எதிரான போரைத் தொடர ஹமாஸ் தனது அடுத்த தலைவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்., 7ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தியது, 40,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், அக்டோபர் 16ஆம் தேதி காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரபா மாவட்டத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில், ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா ஷின்வார், 61, கொல்லப்பட்டார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதி செய்துள்ளது. யாஹ்யா சின்வாரை இழந்தாலும் இஸ்ரேலுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர ஹமாஸ் உறுதியளித்துள்ளது.
இதன்படி கத்தாரில் உள்ள ஹயா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்து போர் தொடுப்பது சரியாக இருக்காது. போர்க்களத்தில் இருந்து செயல்படுபவர் அடுத்த தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே, கொல்லப்பட்ட யாஹ்யா ஷின்வாரின் இளைய சகோதரர் முகமது ஷின்வார் அடுத்த ஹமாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலரும் பட்டியலில் உள்ளதால் ஹமாஸ் தலைவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படலாம்.