காத்மாண்டு: நேபாளத்தில் பாரம்பரிய வழக்கில் ஒரு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா “வாழும் தெய்வம்” அல்லது குமாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மரபில், சிறுமியை அம்மன் அல்லது தெய்வத்தின் அவதாரமாகக் கருதி வழிபடுகின்றனர். பல கட்டமான சோதனைகளின் மூலம் அவரது உடல் மற்றும் மன வலிமை பரிசோதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறது.
குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமிகள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், பண்டிகைகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படுவர். கடந்த 2017ல் தேர்வு செய்யப்பட்ட குமாரி த்ரிஷ்ணா ஷக்யா தற்போது 11 வயதாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஆர்யதாரா ஷக்யா சிறுமியை பல்லக்கில் சுமந்து மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். அவர் பருவம் எய்தும் வரை குமாரியாகவே கருதப்பட்டு, ஹிந்து மற்றும் புத்த மத நம்பிக்கையாளர்கள் வழிபடுவர். இதனால் கல்வி, பொது செயல்கள் போன்றவற்றில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், நேபாள உச்சநீதிமன்ற உத்தரவின் படி புதிய குமாரிகளுக்கு அரண்மனையில் கல்வி கற்கவும், டிவி பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றது, இதன் மூலம் அவர்களின் வாழ்கைச் சூழலை சிறிது மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.