வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் அதிக எண்ணெய் பொருட்கள் வாங்கி வருவதால், 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை இந்தியா மறுத்து, வழக்கம்போல எண்ணெய் கொள்முதல் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது. ஆனால், டிரம்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இது ஏற்க முடியாதது என்றும், இந்தியா சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவுக்கு ஆதரவு தரும் நிலைமை உருவாகி இருப்பதாகவும் கூறினார். இந்த நிலைப்பாடு, இந்தியா-அமெரிக்க உறவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.