காத்மாண்டு: நேபாளத்தில் சமூக மேம்பாட்டு திட்டங்களை முன்னேற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில், இந்தியா அண்மையில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல், உயர் தாக்க சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நமது நாட்டின் சொந்த நிதியில் பல்வேறு நலத்திட்டங்களை நேபாளத்தில் செயல்படுத்தி வருகின்றது.

இந்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம், நேபாளத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 390 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த திட்டங்கள் நேபாள மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார வசதிகளை வழங்க உதவுகின்றன. இதில், நேபாளத்தில் மூன்று பள்ளிகள், ஒரு மடாலயம், ஒரு பள்ளியில் மின்நுாலகம் மற்றும் இரண்டு சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளன.