நியூயார்க்: உலக நாடுகளுக்கிடையேயான போர்களை சமரசம் செய்து தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கையை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் தொடக்கத்தில் பிரதமர் மோடியும் மெலோனியும் தொலைபேசியில் பேசி, உக்ரைன் போர் உள்ளிட்ட பல சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது, அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு முழு ஆதரவை இந்தியா வழங்கும் என்று மோடி உறுதியளித்தார்.

ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொண்ட மெலோனியிடம், உலக போர்களில் இந்தியா நடுவர் பங்கை வகிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்தியா மிகவும் முக்கியமான பங்கை வகிக்க முடியும்” என்று பதிலளித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டிய சூழலில், மெலோனியின் இந்த கருத்து உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறது.