கொழும்பு: கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா ரூ.237 கோடி நிதியுதவி அளிக்கும் என இலங்கை அறிவித்துள்ளது. சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் கல்வித் துறைக்கு 31 கோடி ரூபாயும், சுகாதாரத் துறைக்கு 78 கோடி ரூபாயும், விவசாயத்திற்கு 62 கோடி ரூபாயும் இந்தியா வழங்கும். இந்த திட்டங்கள் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.