வாஷிங்டனில், ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்கா இந்தியாவிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. ரஷ்யாவிடம் இந்தியாவுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் வெளியிட்ட பதிவில், “இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த ரத்தப்பொழிவை முடிவுக்கு கொண்டுவரலாம்” எனக் கூறியுள்ளார். இது அமெரிக்கா–இந்தியா உறவை மேம்படுத்தும் மிக முக்கியமான வாய்ப்பாக இருக்கலாம் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்தியாவும், ரஷ்யாவும் இடையே நீண்டகால உறவு இருப்பதால், புடினிடம் இந்தியா பேசக்கூடிய வலிமை உள்ளது. குறிப்பாக, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போன்றவை இந்த உறவை வலுப்படுத்தியுள்ளன. உக்ரைன் போரை முடிக்க இந்தியா நேரடியாக தூதுவராக செயல்பட வேண்டும் என அமெரிக்கா நம்புகிறது.
போரத்தின் சிக்கலில் உள்ள உலகம், தற்போதைய நிலையில் அமைதியை எதிர்பார்க்கும் நேரத்தில், இந்தியா தனது செல்வாக்கை சரியான பாதையில் பயன்படுத்துமென லிண்ட்சே கிரஹாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வது, அதன் உலகளாவிய தாக்கத்தையும், தூய்மையான நம்பகத்தன்மையையும் வெளிக்காட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.