லண்டன்: இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரஜ் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் பிறந்த நீரஜ் பாட்டீல் ஓர்திங் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். அவர் ஒரு முறை லாம்பெத்தின் மேயராக பணியாற்றினார். அவர் தற்போது தொழிலாளர் கட்சியின் மூலோபாயம் மற்றும் முக்கிய கொள்கைகளை உருவாக்கும் 39 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய செயற்குழுவில் அமர்ந்துள்ளார்.