அமெரிக்கா: அமெரிக்காவில் இந்தியர் நடத்தும் கடையில் விற்பனையான லாட்டரி டிக்கெட்டிற்கு 1.3 பில்லியன் டாலர் முதல் பரிசு விழுந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் காட்டன்வுட் நகரில் இந்தியரான ஜஸ்பால் சிங் என்பவர் லாட்டரி விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நடத்தும் கடையில்
லாட்டரி டிக்கெட்டை வாங்கியவருக்கு அதிர்ஷ்ட மழை பொழிந்து உள்ளது.
3,7,37,49,55,6 ஆகிய எண்களை கொண்ட அந்த லாட்டரி டிக்கெட் தான் லாட்டரி வரலாற்றில் 5 வது பெரிய ஜாக்பாட்டை வென்று உள்ளது. இந்த லாட்டரிக்கு 1.3 பில்லியன் முதல் பரிசு கிடைத்துள்ளது.