மும்பை: மும்பையில் வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு அமெரிக்காவில் உறவினர்கள் உள்ளனர். 2019-ம் ஆண்டில், அமெரிக்காவில் பிறந்த தங்கள் உறவினர்களின் குழந்தையை சில மாதங்களுக்குள் இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், மும்பை தம்பதியினர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்ற குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்தனர், அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: “சிறார் நீதி மற்றும் தத்தெடுப்பு நடைமுறைச் சட்டத்தின் கீழ், இந்தக் குழந்தை தற்போது பாதுகாப்பு தேவைப்படும் சூழ்நிலையிலோ அல்லது வேறு எந்த சட்டப் பிரச்சினையிலோ இல்லை. அவர் உறவினர்களின் குழந்தையாக இருந்தாலும், வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்ற குழந்தையைத் தத்தெடுக்க இந்தச் சட்டத்தில் இடமில்லை.

மனுதாரர்களுக்கு அமெரிக்கக் குழந்தையைத் தத்தெடுக்க அடிப்படை உரிமை இல்லை. மனுதாரர்கள் முதலில் அமெரிக்க சட்டங்களின்படி அந்த நாட்டிலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்கான நடைமுறைகளை முடிக்க வேண்டும்.
அப்போதுதான் மனுதாரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நீதிமன்றம் கூறியது.