அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்ட் டிரம்ப் நாட்டின் வருவாயை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி, ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதா’ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கு 5% கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. பின்னர், அது 3.5% ஆக குறைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த மசோதாவின் திருத்தப்பட்ட இறுதி வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், வெளிநாட்டினர் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான கட்டணம் 3.5 லிருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இந்துதமிழ்26 ஜூன் மேலும், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் உள்ள கணக்குகளிலிருந்து அல்லது அமெரிக்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் அனுப்புவதற்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டண அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.