ஸ்பெயின் : இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு, தற்போது ஸ்பெயினில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்து வருகின்றது. இந்நிலையில், இந்தியாவின் தேசிய மொழி எது என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என்று எம்பி கனிமொழி பதிலளித்தார். இந்தியாவை யாராலும் மிரட்டவும் முடியாது, அடக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மொழிப் பிரச்னை இந்தியாவில் தொடரும் நிலையில் கனிமொழியின் பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்ற குழுவினர் பல நாடுகளுக்கும் சென்று விளக்கமளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.