யெரெவனில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்தியா தற்போது பாகிஸ்தானுடன் கூட்டணி கொண்டுள்ள துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு இஸ்லாமிய நாடுகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதைத் தொடர்ந்து, இந்தியா கிறிஸ்தவ நாடான அர்மேனியாவுடன் இரகசிய ஒத்துழைப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி அளிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக நம் நாடு ஏவுகணைகள் மூலம் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த நடவடிக்கையை துருக்கி மற்றும் அஜர்பைஜான் கண்டித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கின. துருக்கி அதிரடியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை தாக்க ட்ரோன் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை பயன்படுத்தியது. இந்திய பாதுகாப்பு அமைப்புகள் இந்த முயற்சியை முற்றிலும் தோல்வியடையச் செய்தன.
இதன் பின்னணியில் இந்தியா துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பதிலடி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியா தற்போது அர்மேனியாவுக்கு பினகா ராக்கெட் சிஸ்டம், ஆகாஷ் ஏவுகணை மற்றும் ஹாவிட்சர் பீரங்கி உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களை அனுப்பியுள்ளது. இதில் பினகா ராக்கெட் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும்.
அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எதிர்ப்பு, குறிப்பாக நாகோர்னோ–கரபாக் பிராந்திய உரிமைச் சச்சரவின் போது 2020ல் போராக மாறியது. அந்தப் போரில் துருக்கி, அஜர்பைஜானுக்கு ஆதரவு அளித்து வெற்றிபெற உதவியது. ரஷ்யா, அர்மேனியாவுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதனால், அந்நாடு தற்போது இந்தியாவை புதிய ராணுவ கூட்டாளியாகக் காண்கிறது.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு துருக்கி–அஜர்பைஜான் கூட்டணிக்கு எதிரான முக்கியமான ரணவியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அர்மேனியாவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு வரும் இந்தியா, தற்போது துருக்கி மற்றும் அஜர்பைஜானை இடைமறித்து கட்டுப்படுத்தும் நோக்கில் ஆயுத ஏற்றுமதியை விரிவாக்கியுள்ளது.
இதன் மூலம் ஒரே நேரத்தில் இந்தியா தனது சர்வதேச பாதுகாப்பு செல்வாக்கை மேம்படுத்திக்கொள்வதோடு, பகைமையுடன் நடக்கும் நாடுகளுக்கு வலுவான செய்தியையும் அனுப்புகிறது. டிபென்ஸ் வல்லுநர்களின் கணிப்பின்படி, இந்த முயற்சிகள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு இரண்டிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.