ஜி7 பொருளாதாரங்களை இந்தியா முந்திச் செல்லும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் இது தொடர்பாக ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. ஈக்விரஸ் கூறியதாவது:- இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். இது பெரும்பாலான ஜி7 நாடுகளை விட கட்டமைப்பு ரீதியாக சிறந்தது.
இந்தியா விரைவில் ஜி7 பொருளாதாரங்களை முந்திச் செல்லும். இந்தியாவின் கொள்கை சார்ந்த மூலதனச் செலவு, கிராமப்புற நுகர்வு மீட்சி மற்றும் கட்டமைப்பு உற்பத்தி மாற்றங்கள் தற்போதைய நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இதை உறுதி செய்கின்றன என்று ஆய்வு கூறுகிறது. ஈக்விரஸின் மூத்த அதிகாரி மிதேஷ் ஷா கூறுகையில், “தற்போதைய சூழ்நிலை அமெரிக்காவின் வளர்ச்சியைக் கடுமையாகக் குறைத்துள்ளது.

மேலும் இந்தியா உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு (2025-2030) 15 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு ஜப்பான் (1 சதவீதத்திற்கும் குறைவாக) மற்றும் ஜெர்மனி (1.3 சதவீதத்திற்கு சற்று அதிகமாக) ஆகியவற்றை விட கணிசமாக அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.