வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதி குறித்த தகவல்களை நாசா இன்று அறிவிக்க உள்ளது. இது இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும்.
ஜூன் 5-ல், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை வந்தடைந்தனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் அவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
நாசா, ஸ்டார்லைனர் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சுந்திதா மற்றும் புட்ச் வில்மோரின் பாதுகாப்பாக திரும்புவது பற்றிய விளக்கத்தை டெலி கான்பரன்ஸில் வழங்கும். மாற்று முயற்சியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 மிஷன் மூலம் அவர்கள் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.