ஜெருசலேம்: ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானில் இருந்து பல மாதங்களாக தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன, எனவே இஸ்ரேலையும் அதன் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.
இதற்கிடையில் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகளை குறிவைக்க வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும், ஈரான் மீதான தாக்குதலுக்கு எந்த ஒத்துழைப்பும் அல்லது ஆலோசனையும் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.