பெய்ரூட்: லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து ஓராண்டு கடந்தாலும், தாக்குதல் தொடர்கிறது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று மாலை மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், 22 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை (UNIFIL) தலைமையகம் மற்றும் ஐ.நா அமைதி காக்கும் நிலைகளையும் இஸ்ரேல் தாக்கியது. இதில் UNIFIL வீரர்கள் இருவர் பலத்த காயம் அடைந்தனர். எனினும், காயமடைந்த வீரர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை ஐ.நா வெளியிடவில்லை.