இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த காலங்களில், பிரதமருக்குப் பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சர் பங்கேற்றார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்றார்.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். பின்னர் பாகிஸ்தான் சென்ற ஜெய்சங்கருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். ஷெபாஸ் ஷெரீப் ஜெய்சங்கரை கைகுலுக்கி வரவேற்றார். ஜெய்சங்கர் இன்றும் நாளையும் பாகிஸ்தானில் தங்குகிறார். இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார்.