டோக்கியோ: ஜப்பான் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தலைமைக்குப் பிறகு, நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பாரா என்பது பொதுமக்களில் ஆர்வத்தை எழுப்பியுள்ளது.

ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் கட்சித் தலைவர் ஷிகெரு இஷிபா ஒரு வருடத்திற்கு பின்னர் பதவியை விலகினார். இதன் பின்னர், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி, வேளாண் அமைச்சர் கொய்சுமியை 183 வாக்குகளால் வென்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சனே டகைச்சி தற்போது ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்க பிறகு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதேசமயம் நிதி முறைகேடுகள், கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமை போன்ற சவால்கள் எதிர்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.
லிப்ரல் ஜனநாயக கட்சியில் இருந்து பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. சனே, செய்தியாளர்களை சந்தித்த போது, “இது ஒரு புதிய சகாப்தம்” என கூறி, நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டுவதை நோக்கமாக்கியுள்ளார்.