அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது 55 வயது காதலியுடன் 61 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது சாதாரணமாக இல்லாமல், உலகத்தையே மெய்சிலிர்க்க வைத்த விலையுயர்ந்த திருமணமாக அமைந்தது. இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவிற்கு, அவர் ஒரு தீவையே முழுவதும் வாடகைக்கு எடுத்து, 5 அழகான விடுதிகளை ரிசர்வ் செய்திருந்தார். வாட்டர் டாக்ஸிகள், தனிப்பயன் படகு போன்ற வசதிகளுடன், அவரது சொந்த யாச்சாகமான “KORU” எனும் 417 அடி நீளமுள்ள படகில் திருமணம் நடந்தது.

இந்த நிகழ்வில் உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். பில் கேட்ஸ், இவாங்கா டிரம்ப், ஓப்ரா வின்ஃப்ரே, கதர்ஷியன் சகோதரிகள், நடிகை சிட்னி ஸ்வீனி உள்ளிட்டோர் விழாவிற்கு விருந்தினர்களாக வந்தனர். பில் கேட்ஸ், தனது புதிய காதலியுடன் கலந்து கொண்டதும், சர்ச்சைக்குரிய தருணமாக மாறியது. இந்த திருமணம், காதலுக்கு வயதில்லை என்ற வார்த்தையை மீண்டும் நிரூபித்தது.
ஆனால் இந்த ஆடம்பர விழா எதிர்ப்புகளையும் சந்தித்தது. வெனிஸ் நகரம் ஒரு வாரம் மேம்பாலங்கள், வழியிலான போக்குவரத்து, சுற்றுலா பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்படுமெனக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கருப்பு கொடி காட்டி, பெசோஸின் உருவப்படங்களை ஆற்றில் வீசினர். சிலர், வரவேற்பு நிகழ்வு நடக்கவிருந்த அரண்மனை அருகே பொம்மை முதலைகளைக் காட்சிக்கு வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த முழுமையான திருமண நிகழ்வுக்காக ஜெஃப் பெசோஸ் செலவிட்ட தொகை சுமார் 430 கோடி ரூபாயாகும். இது உலகளவில் மிகவும் அதிக செலவாகிய திருமணமாக பதிவு செய்யப்படுகிறது. வெனிஸ் மேயரின் ஆதரவும் பெசோஸுக்கு கிடைத்ததுடன், இவ்விழாவை நடத்த அவர் கொடுத்த தொகையும் பாராட்டத்தக்கது. காதலை கொண்டாடும் விதமாகவும், உலகின் பார்வையை திருப்ப வைத்த ஆடம்பர நிகழ்வாகவும் இந்த திருமணம் புகழ் பெற்றது.