வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை மெழுகுவர்த்தி ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் ஜனாதிபதி ஜோ பைடனின் தீபாவளி வாழ்த்துக்களை அவரது X தளத்தில்; வெறுப்பு மற்றும் பிரிவினை இருளில் இருந்து ஞானம், அன்பு மற்றும் ஒற்றுமையின் ஒளியைத் தேடும் தீபாவளியின் செய்தியின் அடையாளமாக ஜில் மற்றும் நானும் இன்று விளக்கை ஏற்றினோம்.
இந்த விடுமுறையையும், நமது தேசத்தின் நீடித்த உணர்வையும் ஏற்றுக்கொள்வோம் – மேலும் நமது பகிரப்பட்ட ஒளியின் வலிமையைப் பற்றி சிந்திப்போம். மேலும், வெள்ளை மாளிகை தீபாவளியை பெருமிதத்துடன் கொண்டாடியதுடன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.