பிராங்பர்ட்: புதுடெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பிராங்பேர்ட்டில் தரையிறங்கியது. விஸ்தாரா விமானம் புது டெல்லியில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு நடுவானில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பின், உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிராங்பர்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது.
தீவிர சோதனைக்காக விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. முழுமையான விசாரணையில் இது வெறும் புரளி என்பதும், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, லண்டனுக்கு விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
கடந்த சில நாட்களில் விமானங்களுக்கு 40 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் புரளி என கண்டறியப்பட்டு பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.