அமெரிக்க: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் மாயமாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி பேகல் 2.30 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும் சிறிய ரக விமானம் 9 பயணிகள் ஒரு விமானியுடன் புறப்பட்டு சென்றது.
ஆனால், அந்த விமானம் 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது. மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பாதுகாப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.