இஸ்லாமாபாத்: பெண் கல்விக்காக குரல் கொடுத்து துப்பாக்கி சூடு பட்டு நோபல் பரிசு பெற்ற மலாலா தனது தாய் நாட்டுக்கு திரும்பி உறவினர்களை சந்தித்துள்ளார். ,
அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய். பெண் கல்விக்காக அயராது குரல் கொடுத்து வந்தார் மலாலா.
இவரது செயல்பாட்டால் ஆத்திரமடைந்த தாலிபன்கள் கடந்த 2012ம் ஆண்டு அவரை துப்பாக்கியால் சுட்டு நாட்டை விட்டு வெளியேற்றினர். அதன் பிறகு ஒரு சில முறை மட்டுமே பாகிஸ்தான் சென்று வந்த அவர், முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு திரும்பி உறவினர்களை சந்தித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்த மலாலாவை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.