ஜப்பான் அரசாங்கம், ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், தீவு நாட்டில் 300,000 பேர் வரை கொல்லப்படலாம் என்று எச்சரித்துள்ளது. கடந்த வாரம் மியான்மரில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 2,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், ஜப்பானில் எதிர்பார்க்கப்படும் ஒரு மெகா-பூகம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக கணிக்கப்பட்டு வரும் ஒரு நிலநடுக்கம், ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஏற்பட்டால், அது ஒரு பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும். நிலநடுக்கம் சுனாமியையும் ஏற்படுத்தும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதன் தாக்கம் ஜப்பானின் பொருளாதாரத்தை 1.81 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிலநடுக்கங்களுக்கு ஆளாகக்கூடிய ஜப்பானின் நங்கய் ட்ரூ பகுதியில், ரிக்டர் அளவில் 8 முதல் 9 வரையிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1.2 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக்கொள்ளும் அபாயமாக உள்ளது.