புளோரிடா: சக்தி வாய்ந்த மில்டன் சூறாவளி நெருங்கி வருவதால் புளோரிடாவில் இருந்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் நகரமே வெறிச்சோடி வருகிறது.
சக்திவாய்ந்த மில்டன் சூறாவளி நெருங்குவதையொட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வெளியேறி வருகின்றனர்.
மிகவும் அபாயகரமான சூறாவளியாக வலுப்பெற்றுள்ள மில்டன், கரையைக் கடக்கும்பொழுது பெரும் சேதம் ஏற்படுவதுடன், பல நாட்களுக்கு மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஹெலன் சூறாவளியால் கடும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பேரிடர் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.