யெமஸ்ஸி: ஆல்பா ஜெனிசிஸ் ரீசஸ் மக்காக் குரங்குகளைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ஆய்வகத்தில் இருந்த 50 குரங்குகளின் கூண்டை காவலாளி திறந்து விட்டார். அதை சாதகமாக பயன்படுத்தி 43 குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன.
கூண்டில் 7 குரங்குகள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு தெரியப்படுத்துமாறு உள்ளாட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். ஆய்வகத்தில் இருந்து தப்பிய அனைத்து குரங்குகளும் பெண் குரங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவை அனைத்தும் 3.2 கிலோ எடை கொண்டது. தப்பி ஓடிய குரங்குகளுக்கு நோய் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, வெப்ப கேமராக்கள் மற்றும் கூண்டுகள் மூலம், கடந்த புதன்கிழமை ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகளை பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. “தப்பிவிட்ட குரங்குகள் ஆப்பிள்களை விரும்புகின்றன. அது இப்போது கிடைக்கவில்லை. முதலில் வெளியே சென்ற குரங்கை மற்ற குரங்குகள் பின் தொடரலாம். மழையின் காரணமாக குரங்குகளை பிடிப்பது சற்று சவாலானது. ஆனால் தப்பித்த குரங்குகளை எல்லாம் பிடிப்போம்.
“பொது மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று ஆல்பா ஜெனிசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேக் கூறினார். இதற்கு முன், 2016-ல் 19 குரங்குகளும், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் 26 குரங்குகளும் ஆய்வகத்தில் இருந்து தப்பியுள்ளன.