லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி என்ற 29 வயது இளம்பெண், பகவத் கீதையை வாசித்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்றார். சமீபத்தில் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் பழமைவாதக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டாமர் அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா லெஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளார். பாராளுமன்றத்தில் பகவத் கீதையை வாசித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். லெய்செஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று X சமூக ஊடகத்தில் ஷிவானி பதிவிட்டுள்ளார்.