லண்டன், பிரிட்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கேட்விக் விமான நிலையத்தில் நேற்று காலை மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விமான நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.
மேலும், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினர் போலீசாருடன் இணைந்து விமான நிலைய வளாகத்தில் முழு சோதனை நடத்தினர். ஆறு மணி நேரம் கழித்து, எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமான நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.