ஜெருசலேம் மீதான ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ளும் வலிமையும், எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் உறுதியும் உள்ளது என்றார். “ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது, அதற்கான விலையை கொடுக்கும்” என்று அவர் எச்சரித்தார்.
மேலும், “உலகின் அதிநவீனமான இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரானின் தாக்குதலை நிறுத்தியுள்ளது” என்றும் நெதன்யாகு கூறினார். இந்த கடினமான நேரத்தில், நெதன்யாகு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மக்களை பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வருமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஈரான் தாக்குதல் நிறுத்தப்பட்டதால் ஜோர்டான் மற்றும் லெபனானில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வுகள் ஈரான்-இஸ்ரேல் உறவுகளில் உள்ள பதட்டங்களையும், அடிப்படை அரசியல் சூழ்நிலையையும் மேலும் சிக்கலாக்கியுள்ளன.