நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மீது, “அவர் எதுவுமே செய்யவில்லை, ஆனால் நோபல் பரிசு பெற்றார்” என்று தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நார்வே பார்லிமெண்ட் நியமித்த 5 பேர் கொண்ட குழு பரிசை பெறுபவரை தேர்வு செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “ஒபாமா எதையும் செய்யவில்லை. ஆனாலும் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவர் அந்த விருதின் அர்த்தம் கூட அறியவில்லை. நம் நாட்டை பாதித்தவராக இருந்தும் அவரை கௌரவித்தார்கள். நான் எட்டு போர்களை நிறுத்தி இருக்கிறேன் — இது இதற்கு முன் நடந்ததே இல்லை” எனக் கூறினார்.
அவரது இந்த கருத்து மீண்டும் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள், டிரம்பின் “எட்டு போர்களை நிறுத்தினேன்” என்ற கூற்றை மறுத்துள்ளன. இருப்பினும், டிரம்ப் தனது நோபல் ஆசையை வெளிப்படையாக காட்டியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.