கவுதமாலா: அமெரிக்க நாடான கவுதமாலாவில் முன்னோர்களின் இறப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கடைபிடிக்கப்பட்ட இறப்பு நாளில், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ராட்சத பட்டங்கள் செய்து அதனை காட்சிப்படுத்தியும், கல்லறைகளில் பூங்கொத்துகள் வைத்தும் கொண்டாடினர்.
இறந்து போன தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் படங்களை பட்டங்களில் வரைந்தும், பெயர்களை எழுதியும் அன்பை வெளிப்படுத்தினர்.
இந்த நாளில் வான் உயர கட்டப்பட்ட பட்டங்கள் மேலே சொர்க்கத்திலுள்ள தங்கள் உறவினர்களின் ஆசிகளைப் பெற்றுத் தருவதாக, கவுதமாலா மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.